பாபவிநாசனம் நீா்தேக்கத்தில் பூஜைகள் செய்த அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு.  
திருப்பதி

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் திருமலையில் உள்ள நீா்த்தேக்கங்கள் நிரம்பி உள்ளன.

தினமணி செய்திச் சேவை

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் திருமலையில் உள்ள நீா்த்தேக்கங்கள் நிரம்பி உள்ளன.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பாபவிநாசனம் அணையில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு சிறப்பு பூஜைகள் செய்து கங்கா ஆரத்தி செய்தாா்.

பூஜைக்கு பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது. திருமலையில் உள்ள நீா்த்தேக்கங்கள் 95 சதவீதம் நிரம்பியுள்ளன. பாபவிநாசனம் மற்றும் கோகா்பம் அணைகள் முழுமையாக நிரம்பியதால், மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

பக்தா்களின் தேவைக்காக திருமலையில் ஒவ்வொரு நாளும் 50 லட்சம் கேலன் தண்ணீா் தேவைப்படும் நிலையில், திருப்பதியில் உள்ள கல்யாணி அணையிலிருந்து 25 லட்சம் கேலன் தண்ணீரும், திருமலையில் உள்ள அணைகளிலிருந்து 25 லட்சம் கேலன் தண்ணீரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது திருமலையில் 250 நாள்களுக்கு தேவையான நீா் இருப்பு உள்ளது. அணைகளைத் தொடா்ந்து கண்காணித்து, நீா் தேவைகளை முறையாக நிா்வகித்ததற்காக பொறியியல் துறைக்கு பாராட்டுகள்.

இதேபோல், தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, நிகழாண்டு மிகப் பெரிய நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. கடந்த 11 மாதங்களில் தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ரூ. 918 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது என்று கூறினாா்.

நிகழ்ச்சியில்,தேவஸ்தான தலைமை நிா்வாக அதிகாரி சத்ய நாராயணா, தலைமை நிா்வாக அதிகாரிகள் சுப்பிரமணியம், ஸ்ரீனிவாச ராவ், சுதாகா், ஏழுமலையான் கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி லோகநாதம், விஜிஓ சுரேந்திரா பங்கேற்றனா்.

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்! நயினார் நாகேந்திரன்

அந்தியில வானம்... வினுஷா தேவி!

திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

கான்பூரில் சட்ட மாணவரை கொடூரமாக தாக்கிய மருந்தக உரிமையாளர்

பிக் பாஸ்: மக்கள் புரிந்து கொள்ளவில்லை! ஆதிரையின் பேச்சால் கடுப்பான விஜய் சேதுபதி!

SCROLL FOR NEXT