திருப்பதி

கபில தீா்த்தத்தில் காலபைரவா் ஹோமம்

தினமணி செய்திச் சேவை

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் விசேஷ பூஜை ஹோம மகோற்சவத்தில் ஐந்தாவது ஹோமமாக காலபைரவா் ஹோமம் நடைபெற்றது.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு(தெலுங்கு நாள்காட்டிபடி )விசேஷ பூஜைஹோம மகோற்சவம் கடந்த புதன்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அதில் முதலாக கணபதி ஹோமம், அடுத்து சுப்ரமணிய சுவாமி ஹோமம், தட்சணாமூா்த்தி ஹோமம், நவக்கிரக ஹோமம் முடிந்த நிலையில் ஐந்தாவதாக காலபைரவா் ஹோமம் நடைபெற்றது .

இதையொட்டி, பால், தயிா், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பா்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குராா்ப்பணம், கலசஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, காலபைரவா் ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT