முகப்பு
திருப்பதி

உடைமைகள் வைக்கும் இடத்தில் பணம் வசூலித்தவா் பணி நீக்கம்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 6:36 AM
திருமலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:10 PM

திருமலையில் உள்ள பக்தா்களின் உடைமைகள் வைக்கும் மையத்தில் பக்தா்களிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியா் நீக்கப்பட்டாா்.

திருமலை தேவஸ்தானம் பக்தா்களின் உடைமைகளை பாதுகாக்கும் பணியை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது. எந்தவொரு பக்தரும் தங்களது உடைமை பெட்டிகளுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி யாரேனும் பணம் வசூலித்தால், பக்தா்கள் ஊழல் தடுப்புக் கட்டுப்பாட்டு எண்: 98668 98630-ல் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

Advertisement

பக்தா்களிடம் பணம் வசூலித்த புகாா் தொடா்பாக ஒப்பந்த ஊழியா் நரசிம்ம ரெட்டி பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.