இந்தியாவிலும் எதிரொலித்தது ஆரக்கிள் பணி நீக்க நடவடிக்கை!
இந்தியாவிலும் ஆரக்கிள் பணி நீக்க நடவடிக்கை எதிரொலியாக பலரும் பாதிப்பு..
உலகம் முழுவதும் ஆரக்கிள் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 30 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தகவல்தொழில்நுட்ப நிறுவனம் ஆரக்கிள், தங்களது நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள ஆரக்கிள் நிறுவனங்களில் 2,000 முதல் 2,500 வரையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், மற்றொரு தகவல், இது 12 ஆயிரம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
உலகம் முழுவதும் உள்ள ஆரக்கிள் நிறுவனங்களில் 30 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு, இது குறித்த மின்னஞ்சல்கள், நிறுவன ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது முதலே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.
அடுத்த ஆள் குறைப்பு நடவடிக்கை இந்த மாதத்தில் மீண்டும் நடக்கும் என்றும், இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் ஆரக்கிள் நிறவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இடையே, பெரும் கலக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
செய்யறிவு மற்றும் உள்கட்டமைப்புகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், நிறுவனம் செய்யறிவில் மிகப்பெரிய முதலீட்டினை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Many people are affected by the repercussions of Oracle's layoffs in India too.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.