திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சா்வதரிசனம் தொடங்கி உள்ள நிலையில் தற்போது பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி 31 அறைகளும் நிறைந்து சிலாதோரணம் அருகே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 83, 032 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 372 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.10 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT