திருவண்ணாமலை

நகர சார் ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை

வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர சார் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தர்னா செய்தனர் .

தினமணி

வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர சார் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தர்னா செய்தனர் .

வந்தவாசி 11-வது வார்டுக்கு உள்பட்ட மக்தும் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அஜீஸ். இவர் பட்டா மாறுதல் கோரி மனு அளிக்க வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர சார் ஆய்வாளர் அலுவலகத்துக்கு கடந்த திங்கள்கிழமை சென்றாராம்.

அங்கிருந்த சார் ஆய்வாளர், அஜீஸிடம் மனு வாங்காமல் மறுநாள் வரும்படி கூறி தினமும் அவரை அலைக்கழித்து வந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் சென்ற அஜீஸிடம் வெறும் மனு மட்டும் தந்தால் போதுமா என்று கேட்டு திட்டினாராம்.

இதையடுத்து சார் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 11-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நஜீர்அகமது தலைமையில் பொதுமக்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்னா செய்தனர். வந்தவாசி  டிஎஸ்பி டி.மகேந்திரவர்மன் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸார் சமரசம் செய்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT