திருவண்ணாமலை

பள்ளி கட்டடப் பணியை விரைந்து முடிக்கக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

DIN

திருவண்ணாமலை அருகே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பள்ளி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம், செல்லங்குப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
 இந்தப் பள்ளிக்கு  7 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்ட ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், புதன்கிழமை வேளானந்தல் கிராமத்தில் இருந்து செல்லங்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வேட்டவலம் போலீஸார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT