திருவண்ணாமலை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92.16 சதவீதத் தேர்ச்சி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் தேர்வு எழுதியவர்களில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில்: திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 478 மாணவிகள், 10 ஆயிரத்து 457 மாணவர்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 935 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில், 19 ஆயிரத்து 129 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.37 சதவீத தேர்ச்சியாகும்.
செய்யாறு கல்வி மாவட்டத்தில்: செய்யாறு கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 40 மாணவிகள், 6 ஆயிரத்து 105 மாணவர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 145 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 11 ஆயிரத்து 359 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.53 சதவீத தேர்ச்சியாகும்.
திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில்: திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 483 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 115 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 518 மாணவிகள், 16 ஆயிரத்து 562 மாணவர்கள் என மொத்தம் 33 ஆயிரத்து 80 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 30 ஆயிரத்து 488 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 92.16 சதவீதத் தேர்ச்சியாகும்.
தேர்ச்சி விகிதம் 3.13 உயர்வு: 2015-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 85.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2016-ல் இந்த தேர்ச்சி விகிதம் 89.03 சதவீதமாக உயர்ந்தது. இந்த ஆண்டு 3.13 சதவீதம் அதிகரித்து 92.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநில அளவில் 26-ஆவது இடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் கடந்த 2014-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 29-ஆவது இடம் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டு 31-ஆவது இடத்துக்கும், 2016-ஆம் ஆண்டு 30-ஆவது இடத்துக்கும் மாவட்டம் தள்ளப்பட்டது. தற்போது, 26 இடத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் முன்னேறியுள்ளது பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1,643 மாணவர்கள் முழு மதிப்பெண்
திருவண்ணாமலை, மே 19: திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 1,643 பேர் 100-க்கு 100 மதிபெண்கள் எடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 33,080 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். 30,488 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,643 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனர்.
அதன்படி, தமிழ் பாடத்தில் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆங்கிலப் பாடத்தில் ஒருவர் கூட 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. கணிதப் பாடத்தில் 188 பேரும், அறிவியல் பாடத்தில் 290 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1,164 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
2016-ல் 994 பேர் சென்டம்: கடந்த 2016 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் கணிதப் பாடத்தில் 267 பேரும், அறிவியல் பாடத்தில் 201 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 526 பேரும் என மொத்தம் 994 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT