திருவண்ணாமலை

ஏரியில் மண் கடத்திய 5 பேர் கைது: லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

DIN

திருவண்ணாமலை அருகே ஏரியில் இருந்து மண் கடத்திய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரியில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் புகார்கள் சென்றன. இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா போலீஸார் சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளிக்கொண்டிருந்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (21), பாண்டியதுரை (20), வேளையாம்பாக்கம் கிராமம் பிரதாப் (24), கோட்டாங்கல் கிராமம் பார்த்திபன் (30), திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமம் சேகர் (45) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன் (எ) திருப்பதி பாலாஜி (47) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT