திருவண்ணாமலை

விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க மண்வள அட்டையைப் பயன்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

DIN

விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க மண்வள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை செய்து மண் வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. மண் மாசுபடுதல், மாறிவரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் 1980-ஆம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்கச்சத்து 2013 - 14ஆம் ஆண்டில் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2011 - 12ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விளை நிலங்களின் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் பயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பயிர்வாரியான இடுபொருள்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை இடவும், திட்டப் பயன்கள் குறித்து அறியவும், ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதிய அளவு உரமிடவும், பண்ணை மற்றும் பருவ வாரியான உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்த விவரங்களை பராமரிக்கவும் இந்தக் கையேடு உதவுகிறது.
எனவே, தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண்வள அட்டையை விவசாயிகள் பெற்று அதில் குறிப்பிட்டுள்ளவாறு உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT