முகப்பு
திருவண்ணாமலை

வருவாய்த் துறை சார்பில் 3 குடும்பங்களுக்கு நிதியுதவி

செய்யாறு வருவாய்த் துறை சார்பில், அண்மையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஈமச் சடங்கு நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 5:11 AM
பகிர்:

செய்யாறு வருவாய்த் துறை சார்பில், அண்மையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஈமச் சடங்கு நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 
செய்யாறு வட்டம், பாப்பந்தாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர்கள் தியாகராஜன், கணேசன். அதே போல, தவசி கிராமம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் நடராஜன். இவர்கள் மூவரும் நோய்வாய்ப்பட்டு அண்மையில் உயிரிழந்தனர். 
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஈமச் சடங்கு நிதி, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களான ஜீவன்,  லட்சுமி, மேரி பிலோமினா ஆகியோரிடம் தலா ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலைகளை செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அரிதாசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் மகேந்திரமணி, நேர்முக உதவியாளர் எஸ்.கே.வேணுகோபால், வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.