திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

DIN

அனக்காவூர் வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுரையின்படி, பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கடந்த 2-ஆம் தேதி புரிசை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமின்போது, 46 மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தக் குழந்தைகளுக்கு அனக்காவூர் வட்டார வளமையத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் க.வேலு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) ரா.சக்திவேல் ஆகியோர் அடையாள அட்டைகளை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT