திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு

DIN

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு மஹா அபிஷேகம், 1,008 குங்குமார்ச்சனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், தன்வந்திரி மஹா வேள்வி பூஜை நடந்தது.
மாலையில் உத்ஸவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கன்னி மஞ்சள் மாதாம்பிகை அலங்காரத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். விழாவில், வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT