பள்ளிக்கு நவீன தொலைக்காட்சிப் பெட்டி அளிப்பு
வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு அந்தப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி (ஸ்மார்ட் டிவி) வழங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு அந்தப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி (ஸ்மார்ட் டிவி) வழங்கப்பட்டது.
அந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பயன்பாட்டுக்காக இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார்.
தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலர் டி.வி.பச்சையப்பன் தொலைக்காட்சிப் பெட்டியை பள்ளித் தலைமை ஆசிரியர் ப.சீனிவாசனிடம் வழங்கினார்.
பள்ளி ஆசிரியைகள் இரா.சிவகாமி, த.முல்லை, க.வளர்மதி, ச.பாக்கியலஷ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.