திருவண்ணாமலை

கணியாம்பூண்டியில் கிராம சபைக் கூட்டம்

DIN

கீழ்பென்னாத்தூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சியில் மக்கள் திட்ட இயக்க சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2019 - 20ஆவது நிதியாண்டில் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம வளர்ச்சித் திட்ட அமலாக்கம் குறித்த திட்ட வடிவம் தயாரிக்கும் நோக்கில் ம்க்கள் திட்ட இயக்க சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கணியாம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) ஆர்.ரபியுல்லா, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் பேசுகையில், மக்கள் திட்ட இயக்கம் செயல்படுத்த பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும்,  பல்வேறு துறைகள் மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
கூட்டத்தில், ஊராட்சிச் செயலர் தேவி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT