முகப்பு
திருவண்ணாமலை

காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி

நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறை அதிகாரிக ளுக்கு திருவண்ணாமலையில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:29 AM
பகிர்:

நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறை அதிகாரிக ளுக்கு திருவண்ணாமலையில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 2017 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 2018 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வீர மரணமடைந்த காவல் துறை அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.வனிதா தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, வீர மரணமடைந்த காவல் துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பரிசுகள் அளிப்பு: நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பணியின்போது வீர மரணமடைந்த காவல் துறை அதிகாரிகளின் தியாகங்கள், சேவைகளை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விநாடி - வினா போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, ராஜன், கே.ஸ்ரீதர், செல்வி, தங்கராமன், ஆய்வாளர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.