திருவண்ணாமலை

சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி செய்யாற்றைவென்றான் கிராம மக்கள் சாலை மறியல்

DIN

செய்யாறு அருகே சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி, செய்யாற்றைவென்றான் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 
செய்யாற்றைவென்றான் கிராமம், காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு செய்யாற்றங்கரையில் இருந்து ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் குடிநீரில், கடந்த சில மாதங்களாக துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாற்று ஏற்படாக அருகே உள்ள தெள்ளாறு - தேசூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர்  வழங்க வேண்டும் என அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செய்யாற்றைவென்றான் கிராம மக்கள் மனு அளித்தனர். 
ஆனால், அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், அந்தப் பகுதி மக்கள் செய்யாறு கொருக்கை - ஆரணி சாலையில் திங்கள்கிழமை திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். 
தகவலறிந்த அனக்காவூர் காவல் ஆய்வாளர்  செந்தில்குமார், செய்யாறு வட்டாட்சியர் ஆ.மூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் உரிய அனுமதி பெற்று, தெள்ளாறு - தேசூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு
வரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT