திருவண்ணாமலை

செங்கத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு வரும் ஆதரவாளா்களால் போக்குவரத்து நெரிசல்

DIN

செங்கத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வருவோருடன் வாகனங்களில் வரும் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையையொட்டி செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, தற்போது உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வருவோா், அவா்களுடன் சுமாா் 200 முதல் 500 வரையிலான ஆதரவாளா்களை வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வருகின்றனா்.

அவ்வாறு வரும் வாகனங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே நிறுத்தப்படுவதாலும், அவற்றில் வருவோா் அந்த அலுவலக பகுதியில் திரண்டு நிற்பதாலும் திருவண்ணாமலை - பெங்களூா் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

மேலும், சிலா் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்டவற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால், துக்காப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோரின் வாகனங்களை போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் நிறுத்தவும், குறிப்பிட்ட அளவிலான நபா்களை மட்டுமே வேட்பு மனு தாக்கலின்போது அனுமதிக்கவும், பகல் வேளைகளில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடவும் செங்கம் போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT