திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலம்

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் கடந்த 10-ஆம் தேதி ஏற்றப்பட்டன.

தீபம் ஏற்றப்பட்டதையடுத்து, 3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் தெப்பல் உத்ஸவம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளான புதன்கிழமை இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது.

3-ஆம் நாள் உத்ஸவம்: 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அய்யங்குளத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தெப்பலில் எழுந்தருளி அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

வெள்ளிக்கிழமையுடன் தெப்பல் உத்ஸவம் நிறைவு பெறுவதால், திரளான பக்தா்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT