திருவண்ணாமலை

திருமண விருந்தில் மோதல்:  5 பேருக்கு கத்தி வெட்டு: சமையல் கலைஞர் கைது

DIN

வந்தவாசியில் திருமண விருந்தில் ஏற்பட்ட மோதலில் 5 பேரை கத்தியால் வெட்டிய சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞரை போலீஸôர் கைது செய்தனர்.
வந்தவாசியை அடுத்த மேல் நெமிலி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமாருக்கும் (26), சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தியாவுக்கும் (23) வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, விருந்து பரிமாறப்பட்டது.
நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர் சீனிவாசன் (44), இவரது மனைவி பிரேமா (40) ஆகியோர் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு சரத்குமாரின் உறவினர் பச்சையப்பன் (35) உணவு பரிமாறினார். அப்போது, எனக்கு ஏன் கூட்டு, பொறியல் வைக்கவில்லை என்று சீனிவாசன் கேட்டாராம்.
இதனால், சீனிவாசன், பச்சையப்பனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சீனிவாசன், பச்சையப்பனைத் தாக்கினார். பதிலுக்கு பச்சையப்பனின் உறவினர்கள் சீனிவாசனைத் தாக்கினர். அப்போது, சீனிவாசன் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியால் பச்சையப்பன், அவரது உறவினர்கள் முனுசாமி (44), ஆகாஷ் (20), சேகர் (51), ராஜா (50) ஆகியோரைத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த 
5 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில், முனுசாமி மட்டும் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸôர் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT