திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுலா

DIN

திருவண்ணாமலை மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில், கடந்த 19-ஆம் தேதி மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 32 மாணவ, மாணவிகளை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைபபாளர் கார்த்திகேயன் தலைமையில், சனிக்கிழமை சாத்தனூர் அணைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா, ஆல்காக்கள் பூக்கள், முதலைப் பண்ணை, மீன் பண்ணை, நீச்சல்குளம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடன் ஆசிரியர்கள் பிரம்மானந்தம், வேடந்தமதி, பன்னீர்செல்வம், கதிரவன், காமராஜ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT