திருவண்ணாமலை

வழிப்பறி: 4 பேர் கும்பல் கைது

DIN

ஆரணி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேர் கொண்ட கும்பலை ஆரணி கிராமிய போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஆரணியைச் சேர்ந்த டில்லிபாபு (23) கடந்த 12-ஆம் தேதி இரவு சேத்துப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டார் சைக்கிளில் ஆரணியை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது, தனியார் பள்ளி அருகே அமர்ந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் டில்லிபாபுவை வழிமறித்து, அவரைத் தாக்கி, அவரிடமிருந்த செல்லிடப்பேசி, ரூ.1,110 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தலைமறைவாகியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து டில்லிபாபு ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், ஆரணி கிராமிய போலீஸார் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த நெசல் காலனி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (22), சூரியா (23), ராஜ்குமார் (22), பல்லாந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள்தான் டில்லிபாபுவிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் மீது ஏற்கெனவே பல வழிப்பறி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT