திருவண்ணாமலை

சேராம்பட்டு எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கல் விழா

DIN

செய்யாறை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
56-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, வியாழக்கிழமை காலையில் ஸ்ரீஎல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், இரவு மலர், மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.
மேலும், உழவுத் தொழிலுக்கு உதவியாக இருந்து வரும் மாடுகளுடன் விவசாயிகள் பலர் கோயிலை வலம் வந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் கோயிலில் நெய் தீபம் ஏற்றினர். விழாவில் வேலூர், ஆரணி, சென்னை, காஞ்சிபுரம், செய்யாறு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT