குப்பனத்தம் பகுதியில் 2 நாள்கள் மின் தடை
செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
பரமனந்தல் உயர்மின்னழுத்தப் பாதையில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 24), செவ்வாய்க்கிழமை (ஜனவரி 29) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அன்றைய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலபுத்தூர், பரமனந்தல், குப்பனத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.