திருவண்ணாமலை

வாக்களிப்பது குறித்து செயல் விளக்கம்

DIN

செங்கம் அருகே திருவள்ளூவர் நகரில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை செயல் விளக்கம்  அளிக்கப்பட்டது.
இதில், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலர் வில்சன் ராஜசேகர் தலைமையில், அலுவலர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
முன்னதாக, செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்களித்த பின்னர், யாருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றும், அதற்கான கருவியும் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என உதவி தேர்தல் அலுவலர் வில்சன் ராஜசேகர் கேட்டுக் கொண்டார்.
இதேபோல, செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில்  செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, துணை வட்டாட்சியர் துரைராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சத்யா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT