திருவண்ணாமலை

செங்கம் அருகே ரூ.1.92 லட்சம் பறிமுதல்

செங்கம் அருகே வெள்ளிக்கிழமை உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1.92 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

செங்கம் அருகே வெள்ளிக்கிழமை உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1.92 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
 செங்கத்தை அடுத்த கண்ணக்குருக்கை பகுதியில் செங்கம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
 காரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சேட்டு, ரூ.1.92 லட்சத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி முன்னிலையில், செங்கம் கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT