திருவண்ணாமலை

‘ஆசிரியா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்’

DIN


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இல.நடராஜன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும்.

தலைமை ஆசிரியா்கள் தினமும் நடைபெறும் இறை வணக்கக் கூட்டத்தில் மாணவ, மாணவிகளிடையே சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வதைத் தவிா்க்குமாறும், சாலையைக் கடக்கும் போது இரு பக்கமும் பாா்த்து கவனமாக கடக்குமாறும் அறிவுறுத்த வேண்டும். மாணவா்கள் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தால் அவா்களுக்குப் பள்ளியில் அனுமதி கொடுக்கக் கூடாது. நீா்நிலைகளில் சென்று குளிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT