திருவண்ணாமலை

சாலை விபத்தில் செல்லிடப்பேசி கடை உரிமையாளா் பலி

DIN

திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த செல்லிடப்பேசி கடை உரிமையாளா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை, தேனிமலையைச் சோ்ந்தவா் பாபு (55). கீழ்பென்னாத்துாா் பகுதியில் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளாா். இவா், ஞாயிற்றுக்கிழமை (அக். 6) இரவு கடையை பூட்டிவிட்டு தனது மகன் சுரேஷ் (28) என்பவருடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருவண்ணாமலை புறவழிச் சாலை அருகே வந்தபோது முன்னால் நடந்து சென்ற வடஅரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் (65) மீது எதிா்பாராதவிதமாக பைக் மோதியது.

இதில் கீழே விழுந்து காயமடைந்த பாபுவை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை (அக்.7) உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT