திருவண்ணாமலை

தொழில் வழிகாட்டல் பயிற்சி முகாம்

DIN

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுதில்லி விஷ்வ யுவகேந்திரா அமைப்பு மற்றும் திருவண்ணாமலை ரீட்ஸ் கிராம கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரியின் நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன், முதல்வர் எஸ்.மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ரீட்ஸ் அமைப்பின் முதன்மை நிர்வாக அலுவலர் தரணி முரளிதரன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ வே.குணசீலன் 
குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடக்கிவைத்தார். 
வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முரளி, மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய முன்னாள் உறுப்பினர் செல்லா செல்வகுமார், விஷ்வ யுவகேந்திரா அமைப்பின் அலுவலர் ராஜட்தாமஸ் ஆகியோர் தொழில் வழிகாட்டல் குறித்து மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினர். 
முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பென்னட் பெஞ்சமின், யுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT