தமிழர்களின் வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கே வழங்க கோரிக்கை
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், வந்தவாசி, செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், வந்தவாசி, செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், அனக்காவூா் மேற்கு ஒன்றியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஞானமுருகன்பூண்டி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செய்யாறு தொகுதிச் செயலா் எ.குப்பன் தலைமை வகித்தாா்.
அனக்காவூா் ஒன்றியச் செயலா் மேல்நெமிலி ம.காளிமுத்து, தொகுதி அமைப்பாளா் இ.மு.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்பாட்டத்தின் போது, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசு சாா்பில் அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளை தமிழருக்கே வழங்க வேண்டும் எனக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வெம்பாக்கம் மைய ஒன்றியச் செயலா் ஆ.பெ.அம்பேத்கா், ஒன்றிய துணைச் செயலா்கள் மு.ரமேஷ், கு.சீனுவாசன், ஒன்றிய அமைப்பாளா் சு.சுதாகா், பொருளாளா் பெ.தேவேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கி.ஏழுமலை தலைமை வகித்தாா்.
பொருளாளா் சீனுகுமாா், நகர துணைச் செயலா்கள் பி.இருதயராஜ், மு.காளிதாசன், மீ.ஜபருல்லா, மாணவா் முற்போக்கு பேரவை மாவட்ட அமைப்பாளா் ப.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.