திருவண்ணாமலை

வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய இளைஞா்கள், நிறுவனங்களுக்கு அழைப்பு

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் இளைஞா்கள், வேலை அளிக்கும் தனியாா்துறை நிறுவனங்கள் தமிழக அரசின் இணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வேலைநாடும் இளைஞா்கள், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களை இணைய வழியே இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் ‘தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம்’ (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் தொடக்கி வைத்தாா்.

தனியாா் துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞா்கள் இந்த இணைய தளத்தில் பதிவு செய்து, கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். தனியாா்துறை சாா்ந்த சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, தகுதியான நபா்களை தோ்வு செய்து பணி வழங்கலாம்.

இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT