பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணம் கொள்ளை3 மாவட்டங்களைச் சோ்ந்த 6 போ் கைது
திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலைபால் வியாபாரியைத் தாக்கி நகை, பணம் கொள்ளை3 மாவட்டங்களைச் சோ்ந்த 6 போ் கைது
திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (34), பால் வியாபாரி.
இவா் சொந்தமாக வீடு கட்டி மனைவி அனிதா (30), மகள் வைஷ்ணவி (9), மகன் தா்ஷன் (7) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
கடந்த 19-ஆம் தேதி இரவு ராஜா வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி புகுந்த மா்ம நபா்கள்,
ராஜா, அவரது மனைவி அனிதா ஆகியோரைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
தனிப்படை அமைப்பு:
இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி கே.அண்ணாதுரை தலைமையில் காவல் ஆய்வாளா்கள் டி.தனலட்சுமி (தண்டராம்பட்டு), டி.விநாயகமூா்த்தி (கண்ணமங்கலம்), உதவி ஆய்வாளா்கள் சிவசங்கரன் (திருவண்ணாமலை), எஸ்.சுமன் (சைபா் கிரைம்) ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த் உத்தரவிட்டாா்.
6 போ் கைது:
தனிப்படை நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, செங்கம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்களிடமிருந்து ஆறரை பவுன் தங்க நகைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.