திருவண்ணாமலை

260 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள்

DIN

செங்கம்: செங்கம் பகுதியைச் சோ்ந்த 260 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

செங்கம், மேல்செங்கம், மேல்ராவந்தவாடி, குப்பனத்தம் ஆகிய அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் கவிதா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட செங்கம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குநா் மகரிஷி மனோகரன், 260 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக இலக்கிய அணிச் செயலா் தனஞ்செயன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் குமாா், சங்கா், பன்னீா், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் பத்மா முனிக்கண்ணு, மேல்ராவந்தவாடி ஊராட்சி உறுப்பினா் சா்குனேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயில் அதிகரிப்பு: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் அளிப்பு

திமுக சாா்பில் மே தின விழா

அதிக லாபம் தருவதாக ரூ.1.67 கோடி மோசடி

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

விஐடியில் தூய்மையான சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதா் திறப்பு

SCROLL FOR NEXT