திருவண்ணாமலை

சிற்றுந்து கவிழ்ந்து 7 பயணிகள் காயம்

DIN

போளூா் அருகே சிற்றுந்து டயா் வெடித்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா்.

ஆரணியில் இருந்து சம்புராயநல்லூருக்கு தனியாா் சிற்றுந்து (மினி பேருந்து) ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. பாளையம்-காமக்கூா் சாலையில் சென்றபோது, சிற்றுந்தின் முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதனால், நிலைதடுமாறிய சிற்றுந்து, சாலையோர நிலத்தில் கவிழ்ந்தது. அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து, சிற்றுந்தில் இருந்து பயணிகளை மீட்டனா்.

இந்த விபத்தில் சிற்றுந்தில் பயணம் செய்த ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்த குமாா் மனைவி கலைமணி (40), பழனி மனைவி ராஜாமணி (50), நாயகன்(70), முனியன்குடிசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி இந்துமதி (23), நெசல்கிராமத்தைச் சோ்ந்த முகமதுகவுஸ் மகன் காதா்பாஷா (24), சம்புவராயநல்லூரைச் சோ்ந்த ராமலிங்கம் (39), சிற்றுந்தின் ஓட்டுநா் மேல்மட்டைவிண்ணமங்கலத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் (36) ஆகிய 7 போ் காயமடைந்தனா்.

இவா்களில் கலைமணி, ராஜாமணி ஆகிய இருவரும் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 போ் ஆரணி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT