தெள்ளாா் ஒன்றியக் குழுக் கூட்டம்
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் இரா.குப்புசாமி முன்னிலை வகித்தாா்.
தென்தின்னலூா் கூட்டுச் சாலையிலிருந்து பாஞ்சரை வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை என்று ஒன்றியக்குழு உறுப்பினா் பா.தசரதன் தெரிவித்தாா்.
தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் நிலவும் சிகிச்சை குறைபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா் தீபா வெங்கடேசன் கோரிக்கை விடுத்தாா்.
பின்னா், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1.25 கோடி செலவில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.