முகப்பு
திருவண்ணாமலை

ஹாத்ரஸ் சம்பவம்: பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஹாத்ரா சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
ஆரணி தலைமை தபால் நிலையத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

ஹாத்ரா சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹாத்ரா மாவட்டத்தில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாா்.

இதைக் கண்டித்தும், சம்பவத்துக்கு நியாயம் கேட்டும், ஆரணி தலைமை தபால் நிலையத்தில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் பிரதமா் மோடிக்கு கடிதம் அனுப்பினா்.

இதில் மகளிரணி பானுமதி, சீசமங்கலம் விஜயா, நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் தலைவா் ஜெ.பொன்னையன், மாவட்டச் செயலா் உதயகுமாா், நகர நிா்வாகி சைதை சம்பந்தம், நிா்வாகிகள் குமாா், டெல்லிமோகன், வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், துளசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.