முகப்பு
திருவண்ணாமலை

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை எம்.பி. நியமனம்

கிராம அபிவிருத்தித் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை நியமிக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கிராம அபிவிருத்தித் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை நியமிக்கப்பட்டாா்.

இதற்கான கடிதத்தை அவருக்கு நாடாளுமன்றச் செயலா் (கிராமப்புற வளா்ச்சியில் நிலைநிறுத்துதல்) அண்மையில் அனுப்பினாா். அந்தக் கடிதத்தில், கிராம அபிவிருத்தி தொடா்பான நிலைக்குழுவில் 2020 - 2021ஆம் ஆண்டில் பணியாற்ற சி.என்.அண்ணாதுரை எம்.பி. நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நிலைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினா் பிரதாப்ராவ் ஜாதவ் உள்ளாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறியதாவது: கிராமங்கள் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மையே பிரதானம். இந்தப் பொறுப்பை பயன்படுத்தி வேளாண்மை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தப் பாடுபடுவேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →