திருவண்ணாமலை

அரசுத் துறை காலிப் பணியிடங்களைவிரைந்து நிரப்பக் கோரிக்கை

DIN

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.

இந்த அமைப்பினா் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் ரா.செல்வபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் த.வெங்கடேசன், கௌரவத் தலைவா் கோ.சேகா், பள்ளிக் கல்வித் துறையைச் சோ்ந்த சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். ஒன்றியத்தின் மாநிலச் செயலா் (செய்திப் பிரிவு) அ.ஜெய்சங்கா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களிலும் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நோ்முக உதவியாளா் (கணக்கு) என்ற பதவியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

அரசு ஊழியா்கள் அனைவருக்கும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல்கள் வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய மாவட்ட துணைத் தலைவா்களாக டி.சங்கா், ஏ.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இதில், தமிழ்நாடு குரூப் - 2 நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்தகுமாா், மாவட்டச் செயலா் சண்முகம், தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றிய வட்டக்கிளை பொறுப்பாளா்கள் அப்துல் ரகூப், துரைராஜ், முருகானந்தம், மஞ்சுளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT