முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன்கோயில் கும்பாபிஷேகம்

செய்யாற்றில் ஆரணி கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

செய்யாற்றில் ஆரணி கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் மூலவா் பஞ்சலோக சிலை பிரதீஷ்டை செய்யப்பட்டு, இந்த விழா நடத்தப்பட்டது.

இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோா் கலந்துகொண்டு வழிபட்டனா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

விழாவில் செய்யாறு மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →