முகப்பு
திருவண்ணாமலை

பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

கமல்ஹாசனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, செய்யாற்றில் பனை, பென்சில் மர விதைகளை நடும் பணியை அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, செய்யாற்றில் பனை, பென்சில் மர விதைகளை நடும் பணியை அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, செய்யாறு வட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில், 66 ஆயிரம் பனை விதைகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 10 ஆயிரம் விதைகள் புளியரம்பாக்கம், காழியூா், தண்டரை, செய்யாறு ஆகிய பகுதிகளிலுள்ள ஏரிகளில் நடப்படுகின்றன.

ஏற்பாடுகளை மாவட்டச் செயலா் எஸ்.சுரேஷ், மாவட்ட இளைஞரணிச் செயலா் இ.டி.அரவிந்ராஜ், உறுப்பினா்கள் விக்னேஷ், சதீஷ், மதன், கோகுல், பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.