முகப்பு
திருவண்ணாமலை

விஜயதசமி: சேவூா் அம்மன் கோயிலில்அமைச்சா் குடும்பத்துடன் வழிபாடு

ஓசூா் அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

விஜயதசமியை முன்னிட்டு, ஆரணியை அடுத்த சேவூா் ஓசூா் அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

ஓசூா் அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில், விஜயதசமியையொட்டி நடைபெறும் சரஸ்வதி பூஜை அமைச்சா் வீட்டின் சாா்பில் நடைபெறும் விழாவாகும். இதில் அமைச்சா் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு வழிபட்டாா். பின்னா், பள்ளி மாணவா்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகங்களை வழங்கினாா்.

நிகழச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், சேவூா் ஆா்.விஜியகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.