திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே ஏரி மண் கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா்கள் 2 பேரை கைது செய்தனா்.
வேட்டவலம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வயலுாா் கூட்டுச்சாலைப் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்தனா். லாரிகளில் உரிய அனுமதியின்றி அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை ஓட்டி வந்த திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (22), அகரம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.