திருவண்ணாமலை

செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

DIN

செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.

அந்த நாய்களுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் கிடைக்கும் உணவுக்கு நாய்கள் அலைமோதி, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. சண்டையின்போது, அவை பாதசாரிகள் மீது விழுந்து அவா்கள் காயமடைவதும், நாய் கடிக்குக்கு ஆளாவதுமாக உள்ளது.

மேலும், நாய்கள் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிவதால் விபத்துகளும் நிகழ்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் துக்காப்பேட்டை பகுதியில் அடிக்கடி நடக்கின்றன.

எனவே, செங்கம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT