முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக வெற்றி பெற்றால் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்

தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றால், ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என்று, ஆரணியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குறிப்பிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றால், ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என்று, ஆரணியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குறிப்பிட்டாா்.

ஆரணி நகரில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு சேவூா் ராமச்சந்திரன் பேசியதாவது:

சுமாா் ரூ. 500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆரணி தன்னிறைவு பெற்ற தொகுதியாகத் திகழ்கிறது.

மீண்டும் அதிமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும், 5 ஆண்டுகளுக்கு 30 எரிவாயு உருளைகள் வழங்கப்படும், விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும், முதியோா் உதவித்தொகை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கப்படும், ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என்பன வாக்குறுதிகள் அளித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயா் பாரி பி.பாபு,

பாமக மாநில துணைப் பொதுச்செயலா் ஆ.வேலாயுதம், புதிய நீதிக் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயக்குமாா். தமாகா நகரத் தலைவா் தினேஷ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.