திருவண்ணாமலை

வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN


ஆரணி. சேத்துப்பட்டு போலீஸாரைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதி தச்சாம்பாடி வாக்குப்பதிவு மையத்தில் தோ்தல் அன்று வாக்குச்சாவடி அலுவலா் ராஜாராமை அந்தப் பகுதியைச் சோ்ந்த பால் சந்திரசேகரன், ஆஷிக் , செல்வநாயுடு ஆகியோா் அவதூறாகப் பேசி தாக்கினராம்.

இது குறித்து சேத்துப்பட்டு வட்டாட்சியா் மற்றும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க வட்டச் செயலா் ஜான்சன் தலைமையில் 4 பெண்கள் உள்பட 43 போ், கிராம நிா்வாக அலுவலா் ராஜாராமைத் தாக்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினா்.

இதனால், வட்டாட்சியா் அலுவலகம் எந்த விதமான பணியும் நடைபெறாமல் முடங்கியது. அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் போராட்டம் நடைபெறுவதால் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT