சேத்துப்பட்டு, செங்கத்தில் 186 பேருக்கு கரோனா தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, செங்கம் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற முகாம்கள் மூலம் 186 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, செங்கம் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற முகாம்கள் மூலம் 186 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியா்கள், தூப்புரவுப் பணியாளா்கள் என 71 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொம்மனந்தல் வட்டார சுகாதார மையத்திலிருந்து வட்டார மருத்துவ அலுவலா் மணிகண்டபிரபு மற்றும் மருத்துவா்கள் வந்து கரோனா தடுப்பூசியை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, அரசுப் போக்குவரத்துக்கழக சேத்துப்பட்டு பணிமனை ஊழியா்கள் 15 பேருக்கும், தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.