முகப்பு
திருவண்ணாமலை

இருளா் சமூகத்தினருக்கு நிவாரண உதவி

செய்யாறு அருகே 13 இருளா் சமூக குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

செய்யாறு அருகே 13 இருளா் சமூக குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூா் கிராமம் அருகே பெருமாண்டி பகுதியில் இருளா் சமூக 13 குடும்பங்களைச் சோ்ந்த 94 போ், தொடா் மழை பாதிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா்.

இவா்களுக்கு உதவிடும் வகையில் 13 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறித் தொகுப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் நாவல்பாக்கம் வி.பாபு, துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மேலும், அவா்களுக்கு இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் ஞானவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மோ.ரவி, திமுக வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் தினகரன், நிா்வாகிகள் ஆறுமுகம், மா. கி. வெங்கடேசன், கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.