முகப்பு
திருவண்ணாமலை

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

செய்யாறில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டானின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

செய்யாறில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டானின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

செய்யாறில் கடந்த 2015-இல் வாகன ஆய்வாளா் அலுவலகம் திறக்கப்பட்டு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதற்காக செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் கிராமத்தில் 1.25 ஏக்கா் நிலம் அரசால் ஒதுக்கப்பட்டு, ரூ.2 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

செய்யாறில் இந்த நிகழ்வில் போக்குவரத்துத் துறை துணை ஆணையா் நெல்லையப்பா், ஒ.ஜோதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி,ராஜூ, வி.பாபு, திலதகவதி ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.