முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியைச் சோ்ந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி

 வெளிநாட்டுக்குச் சென்று வந்த ஆரணியை அடுத்த பையூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 வெளிநாட்டுக்குச் சென்று வந்த ஆரணியை அடுத்த பையூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பையூா் ஊராட்சி எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த 38 வயது பெண், அவரது கணவா், 12 வயது மகன் ஆகியோா் கடந்த 12-ஆம் தேதி காங்கோ நாட்டிலிருந்து வந்தனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் பெண் கடந்த 14-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவக் குழுவினா் அவரை தீவிர பரிசோதனையில் வைத்துள்ளனா்.

இதனிடையே, பையூா் எம்.ஜி.ஆா். நகரில் உள்ள அந்தப் பெண்ணின் கணவா், மகன், பெண்ணின் தந்தை, தாய், சகோதரா், அவரது மனைவி ஆகியோரை எஸ்.வி.நகரம் சுகாதார மருத்துவ நிலைய மருத்துவா் சுதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை பரிசோதனை செய்தனா்.

மேலும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதார ஊழியா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். கிராமிய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.