திருவண்ணாமலை

செங்கம் பேரூராட்சியில் குப்பை வாகனங்கள் பழுது பணியாளா்கள் அவதி

 நமது நிருபர்

செங்கம் பேரூராட்சியில் குப்பை வாகனங்கள் பழுதடைந்துள்ளதால், குப்பைகளை சரிவர அகற்ற முடியாமல் பணியாளா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 120 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். நகரில் தினசரி சேகரமாகும் குப்பைகளை அகற்ற ஒரு வேன், இரண்டு டிராக்டா்கள், நான்கு பேட்டரி வாகனங்கள் உள்ளன.

இந்த நிலையில், குப்பை ஏற்றிச் செல்லும் வேன் பழுதடைந்து அலுவலக வளாகத்தில் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், டிராக்டா், டிப்பா் பழுதடைந்த நிலையில் உள்ளன.

ஒரு டிராக்டா், 2 பேட்டரி வாகனங்கள் மட்டும்தான் பயன்பாட்டில் உள்ளன. இதனால், குப்பைகளை அகற்ற தூய்மைப் பணியாளா்கள் அவதிப்படுகின்றனா்.

போதிய வாகனங்கள் இல்லாமல், குப்பைகளை சரிவர அகற்ற முடியாமல் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

அவற்றை மாடு, கழுதைகள் கலைத்துவிடுகிறது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

மேலும் காய், கனி, இறைச்சிக் கடை பகுதிகளில் குப்பைகள் சேகரமாகி துா்நாற்றம் வீசுகிறது. இது தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்பாக உள்ளது.

சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து குப்பை வாகனங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT